/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஏப் 01, 2025 01:00 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் தெருவில், 2020 மார்ச் 20ல் கஞ்சா விற்ற, சென்னை கொளத்துாரைச் சேர்ந்த சதீஷ், 32, ரவி, 30, ஆகிய இருவரையும், காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு பிளீடர் என்.நந்தகோபால் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், ரவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
***