ADDED : ஜன 18, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகரி சித்துார் மாவட்டம் நகரி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாகாந்த், 28. இருவரும் நெசவு தொழில் செய்து வந்தனர்.
மாட்டு பொங்கலை ஒட்டி, நேற்று முன்தினம் இருவரும், நகரி அடுத்த தடுக்குப்பேட்டை பகுதியில் உள்ள சலபல கோணையில் உள்ள தாமரை குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, தண்ணீரில் மூழ்கினர்.
நகரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மூன்று மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கி இறந்த இருவரது உடலையும் மீட்டனர்.
இது குறித்து நகரி போலீசார் விசாரித்துவருகின்றனர்.