/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
70 ஆண்டாக போதிய வசதியில்லாத கோவில் பதாகை வி.ஏ.ஓ., ஆபீஸ்
/
70 ஆண்டாக போதிய வசதியில்லாத கோவில் பதாகை வி.ஏ.ஓ., ஆபீஸ்
70 ஆண்டாக போதிய வசதியில்லாத கோவில் பதாகை வி.ஏ.ஓ., ஆபீஸ்
70 ஆண்டாக போதிய வசதியில்லாத கோவில் பதாகை வி.ஏ.ஓ., ஆபீஸ்
ADDED : மே 13, 2025 12:35 AM

ஆவடி :ஆவடி அடுத்த கோவில்பதாகை, கம்மாளர் தெருவில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 100 சதுர அடி உடைய வாடகை கட்டடத்தில், கடந்த 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், இரண்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ், 10 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள், பட்டா, சிட்டா, அடங்கல், வருமான வரி, ஜாதி சான்றிதழ், ஓ.பி.சி., சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வருவாய் தொடர்பான அனைத்து சான்றிதழ்கள் பெற, கோவில்பதாகை கிராம நிர்வாக அலுவலகத்தை நம்பி உள்ளனர்.
தற்போது அரசு பொது தேர்வு முடிந்துள்ளதால், மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை பெற தினமும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த அலுவலகத்தில், குடிநீர், கழிப்பறை, பொதுமக்கள் உட்கார இடவசதி என எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லை. இது குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொந்தமாக கட்டடம் கட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.