/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் அடிமனை குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
/
கோவில் அடிமனை குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2024 12:55 AM

திருநீர்மலை,திருநீர்மலையில், ரங்கநாதர் கோவில் அடிமனை குடியிருப்போர் பொது நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கோவில் மனைகளில் வசிப்போருக்கு சதுர அடி கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை ரத்து செய்து, பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
மேலும், கோவிலுக்கு சொந்தமில்லாத கிராமநத்தம், சர்க்கார் புறம்போக்கு போன்ற இடங்களுக்கு, குடியிருப்போர் அறியாமையால் வாடகை செலுத்தியதை கணக்கில் கொண்டு, சொந்தம் கொண்டாடுவதை தவிர்த்து, குடியிருப்போருக்கு வாழ்வுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை வலியுறுத்தி, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் வாசலில், கோவில்மனை குடியிருப்போர் சங்க கூட்டமைப்பினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.