தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோவில் இடம் ஆக்கிரமிப்பு நான்கு கடைகளுக்கு ‘சீல்ʼ

கோவில் இடம் ஆக்கிரமிப்பு நான்கு கடைகளுக்கு ‘சீல்ʼ

கோவில் இடம் ஆக்கிரமிப்பு நான்கு கடைகளுக்கு ‘சீல்ʼ


ADDED : செப் 29, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயபுரம்: அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து, நான்கு கடைகளை பூட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று, ‘சீல்ʼ வைத்தனர்.

ராயபுரம் எம்.எஸ்., கோவில் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 1,817 சதுர அடி கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

இந்நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி, லோகநாதன், கோபு, சிவா, துவரகாம்பாள் உள்ளிட்ட ஐந்து பேர் ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் வீடு கட்டியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், சென்னை இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, இடத்தை மீட்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, உதவி கமிஷனர் புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமித்திருந்த நான்கு கடைகளை நேற்று பூட்டி, ‘சீல்ʼ வைத்தனர். இதில் வீடு கட்டி குடியிருந்து வரும் ஒருவருக்கு 2 நாட்கள் அவசகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us