/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெம்போ டிராவலர் வேன் தீப்பற்றி எரிந்து நாசம்
/
டெம்போ டிராவலர் வேன் தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : ஜூலை 08, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெரம்பூரில் இருந்து திருவான்மியூர் டைடல் பார்க்கிற்கு, நேற்று காலை 11:45 மணிக்கு, ஐ.டி., ஊழியர்களுடன் டெம்போ டிராவலர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம் அருகே சென்றபோது, வாகனத்தின் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, வாகனத்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், ஊழியர்களை உடனடியாக கீழே இறக்கியுள்ளார்.
சற்று நேரத்திலேயே வாகனம் தீப்பற்றி எரிய துவங்கியது. சம்பவம் அறிந்து வந்த நந்தனம் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகனம் முழுதும் தீயில் எரிந்து நாசமானது.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.