/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் - ரயில் நிலையம் நடை மேம்பாலத்துக்கு 'டெண்டர்'
/
கிளாம்பாக்கம் - ரயில் நிலையம் நடை மேம்பாலத்துக்கு 'டெண்டர்'
கிளாம்பாக்கம் - ரயில் நிலையம் நடை மேம்பாலத்துக்கு 'டெண்டர்'
கிளாம்பாக்கம் - ரயில் நிலையம் நடை மேம்பாலத்துக்கு 'டெண்டர்'
ADDED : பிப் 01, 2024 12:19 AM
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணியருக்கு மாற்று போக்குவரத்து சேவைகள் இல்லாதது, கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை கருத்தில் வைத்து, போக்குவரத்து குழுமமான கும்டா, வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்டது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், நடை மேம்பாலம் அமைக்க கும்டா திட்டமிட்டது.
இதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் துவக்கி உள்ளது. நடைமேம்பால கட்டுமான பணிக்கான ஒப்பந்த புள்ளியை, சி.எம்.டி.ஏ., கோரியுள்ளது.
நகரும் படிக்கட்டுகள், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த நடை மேம்பாலம் அமையும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.