/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெயர் பலகை அமைக்க ரூ.5.56 கோடிக்கு டெண்டர்
/
பெயர் பலகை அமைக்க ரூ.5.56 கோடிக்கு டெண்டர்
ADDED : ஜன 15, 2024 02:24 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகள், இதுவரை மாற்றப்படவில்லை.
தவிர, நகராட்சி, பேரூராட்சியின் போது வைக்கப்பட்ட பழைய பலகைகளே, பல பகுதிகளில் காணப்படுகின்றன என, சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஐந்து மண்டலங்களில் 70 வார்டுகளிலும், பெயர் பலகைகளை மாற்றியமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
இதில், 2,500 புதிய பெயர் பலகைகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள, 2,300 பலகைகளில் பழைய ஸ்டிக்கர் எடுத்துவிட்டு புதிதாக ஒட்டப்பட உள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.