/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொருக்குப்பேட்டை ரயில்வே 'கூட்ஸ் ஷெட்'டிற்கு விடியல் ரூ.69 கோடியில் மேம்படுத்த 'டெண்டர்'

ADDED : அக் 14, 2025 01:10 AM
சென்னை, கொருக்குப்பேட்டையில் ரயில்வே சரக்குகள் கையாளும் பகுதியான, 'கூட்ஸ் ஷெட்'டை, 69 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு டெண்டர் கோரப்பட்டு, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள கூட்ஸ் ஷெட்களில் கொருக்குப்பேட்டை முக்கியமானது. இங்கு, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, பீஹார், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கோதுமை, அரிசி, சோளம், சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சரக்குகளை கையாளும் பகுதிகளில் மேற்கூரை கூட இல்லை.
இதனால், மழை காலங்களில் கோதுமை, நெல், சோளம், சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து சேதமடைகின்றன. இது குறித்து, நம் நாளிதழில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த கூட்ஸ் ஷெட்டை அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கொருக்குப்பேட்டை கூட்ஸ் ஷெட்டில் 69 கோடி ரூபாயில், மேம்பாட்டு பணி களை மேற்கொள்ள டெண்டர் வெளியிட்டு, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
மேம்பாட்டு பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.