/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாபெரும் சுற்றுலா மையமாகுது கடற்கரை நகரமான மாமல்லை 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க 'டெண்டர்'
/
மாபெரும் சுற்றுலா மையமாகுது கடற்கரை நகரமான மாமல்லை 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க 'டெண்டர்'
மாபெரும் சுற்றுலா மையமாகுது கடற்கரை நகரமான மாமல்லை 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க 'டெண்டர்'
மாபெரும் சுற்றுலா மையமாகுது கடற்கரை நகரமான மாமல்லை 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க 'டெண்டர்'
ADDED : ஜூலை 08, 2025 12:50 AM
சென்னை, தமிழகத்தின் கடற்கரை நகரமான மாமல்லபுரத்தை, மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான மாஸ்டர் பிளான், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்ட பரிந்துரைப்படி, மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம் உருவாக்கும் முயற்சியில் சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரத்தை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான, 'மாஸ்டர் பிளான்' என்ற முழுமை திட்டத்தை தயாரிக்க, தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் டெண்டர் கோரியுள்ளது.
இது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பழமையான கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில், நவீன சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ள உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தொழில்நுட்பத்துடன் கூடிய அனுபவம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எட்டு மாதங்களில் இப்பணியை முடிக்க வேண்டும்.
அணுகு சாலைகள், இணைப்பு சாலைகள், தோட்டங்கள், உணவு மையங்கள், வணிக வளாகம், திறந்தவெளி திரையரங்கம், ரிசார்ட்டுகள், கண்ணாடி பாலங்கள், லேசர் காட்சிகள், மாநாட்டு மையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பசுமை இடங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இந்த திட்ட அறிக்கை இருக்கும்.
இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் மாமல்லபுரம், தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறும். கடற்கரை சுற்றுப்பயணம், கலாசார நடைபாதை, தாவரவியல் பூங்கா, சாகச விளையாட்டுகள் என பல்வேறு நவீன வசதிகள் வர உள்ளன.
அதே நேரத்தில் கற்கோவில்கள், பழங்கால கல் சிற்பங்களும் எப்போதும்போல நம்மை ஈர்க்கும்.
இதனால், மாமல்லபுரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெரும் வளர்ச்சி அடையும். மழைக்கால திருவிழா என பல்வேறு நிகழ்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அனைத்து கட்டுமானமும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம், வனத்துறை, வனவிலங்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்கும். திட்டப்பணிகளை ஒரு குழு அமைத்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.