/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்தூர் அருகே பரபரப்பு
/
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்தூர் அருகே பரபரப்பு
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்தூர் அருகே பரபரப்பு
குடோனில் பயங்கர தீ விபத்து குன்றத்தூர் அருகே பரபரப்பு
ADDED : ஜன 12, 2024 12:58 AM

குன்றத்துார், குன்றத்துார் அருகே, இரண்டாம் கட்டளை ஊராட்சியில் 'மதன் டிரேடர்ஸ்' என்ற பெயரில், திறந்தவெளி கிடங்கு இயங்கி வருகிறது.
இங்கு, தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவுகள், காஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு 7:00 மணிக்கு சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் வேலையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. தீயை அணைக்கும் பணி இரவு 9:00 மணிக்கும் மேல் தொடர்ந்தது.