/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜெயிலரை தாக்கிய பயங்கரவாத கைதிகள்
/
ஜெயிலரை தாக்கிய பயங்கரவாத கைதிகள்
ADDED : ஜன 12, 2025 12:19 AM
புழல்,புழல் சிறையில், நேற்று முன்தினம் இரவு சிறை போலீஸ்காரர்கள் சோதனையின்போது, உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள பயங்கரவாத கைதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது அறையில் இருந்து, மொபைல் போன்கள், சார்ஜர், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் சாந்தகுமார், உதவி ஜெயிலர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொள்ள சென்றனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாத கைதிகள், அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இருவரையும் தாக்கி, கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கண்ட சக சிறை காவலர்கள், அங்கு சென்று தடுத்து நிறுத்தி, பயங்கரவாத கைதிகளை அறையில் பூட்டினர்.
மேலும், ஜெயிலர், உதவி ஜெயிலரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

