/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரபல ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை
/
பிரபல ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை
ADDED : பிப் 18, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர் : தி.நகர், நாகேஸ்வர ராவ் சாலையில் பிரபல ஜவுளிக்கடையான 'குமரன் சில்க்ஸ்' உள்ளது. நான்கு மாடி கட்டடத்தில் அமைந்துள்ள இந்த கடையில், மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த அஜித், 47, என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலை வந்து பார்த்தபோது நான்காவது மாடியில் உள்ள பால் சீலிங்கை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 9 லட்சம் ரூபாயை கெள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் மூவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காசாளர் அஜித் அளித்த புகாரின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.