/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தைப்பூசம் 965 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
தைப்பூசம் 965 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 29, 2026 05:25 AM
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 965 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி விடுமுறை நாட்களில், பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வரும் 30, 31, வார இறுதி நாட்கள் மற்றும் பிப்., 1ம் தேதி தைப்பூசம் வருகிறது.
இதனால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு 30ல் - 360, 31ம் தேதி 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர் மற்றும் பெங்களூருக்கு வரும் 30, 31ம் தேதிகளில் தலா 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

