/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டை மின் வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
தண்டையார்பேட்டை மின் வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
தண்டையார்பேட்டை மின் வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
தண்டையார்பேட்டை மின் வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : மே 16, 2025 12:29 AM
தண்டையார்பேட்டை :தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில், தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.
மண்டல அதிகாரி திருநாவுக்கரசு, தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள், சுகாதாரத் துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வார்டுகளில் நடக்கும் பணிகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள் பேசியதாவது:
காங்., 37வது வார்டு, டில்லிபாபு: எம்.கே.பி.நகர், அன்னை இந்திரா நகரில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், அதிகளவில் ஸ்டீல், மரப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதனால் பகுதிவாசிகள், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இவற்றை அகற்ற நடவடிக்கை வேண்டும்.
எம்.கே.பி.நகர், மத்திய நிகழ் சாலையில் ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.
மார்க.கம்யூ., 41வது வார்டு விமலா:
கொடுங்கையூர் குப்பை கிடங்கைச் சுற்றி எட்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். வடசென்னையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், காற்றுமாசு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில் எரி உலை தொழிற்சாலை அமைத்தால், அதைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். அதனால் எரி உலை தொழிற்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், உதவியாளர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., 46வது வார்டு கவுன்சிலர் ஆனந்தி: கோடை காலம் என்பதால், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்க மொபைல் போபனை தொடர் கொண்டால், மின் வாரிய அதிகாரிகள் மொபைல்போன் எடுப்பதில்லை. எங்கள் அழைப்புகளையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
வியாசர்பாடி, காந்திபுரம், திடீர் நகர் பகுதி இடம், மின் வாரியம் மற்றும் ரயில்வேவிற்கு சொந்தமானது. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 950 குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
இப்பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. குடிநீர் வாரிய அதிகாரிகள், தினமும் ஒரு லாரி தண்ணீர் கூடுதலாக இப்பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில், சமூக நலக்கூடம் கட்டுவது, பள்ளிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு 17.67 கோடி ரூபாய் மதிப்பில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோடை வெயில் துவங்கி உள்ளதால், மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.