/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த ' ஆதி கலைக்கோல் ' கலை சங்கமம்
/
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த ' ஆதி கலைக்கோல் ' கலை சங்கமம்
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த ' ஆதி கலைக்கோல் ' கலை சங்கமம்
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த ' ஆதி கலைக்கோல் ' கலை சங்கமம்
ADDED : டிச 03, 2024 12:43 AM

சென்னை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டை பாதுகாத்து, காட்சிப்படுத்தும் வகையில், 'ஆதி கலைக்கோல் கலை, இலக்கிய சங்கமம்' சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
விழாவில், ஆதிதிராவிடர், பழங்குடியினரின் தொன்மையான கலை, இலக்கியம், பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், 40க்கும் மேற்பட்ட கலைஞர்களின், 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்; 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தொன்மையான 800க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள், நாடக கலைஞர்களின் ஆடைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பித்தளை செண்டை, மந்தம், நையாண்டி தவில், வீணை, கோமடி சங்கு, கட்ட மறக்க, பறை, துடுப்பு உள்ளிட்ட இசை கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இவையும், பல்லாங்குழி, பரமபதம், உரியடி ஆகிய விளையாட்டு நிகழ்வுகளும், பழியர் இன மக்களின் கடவுள் வழிபாட்டு நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''ஆதிதிராவிட, பழங்குடியினரின் மறைக்கப்பட்ட கலாசாரத்தை, அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துக் கூறுவது, இவ்விழாவின் நோக்கம்.
''இந்த மக்களின் ஒடுக்கப்பட்ட 'நையாண்டி மேளம், ஆதிவாசி நடனம், துடுப்பாட்டம்' உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட மறைக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகளை, மீட்டு நிகழ்த்துவதில் மகிழ்ச்சி,'' என்றார்.