/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ஆறுவழி மேம்பாலச்சாலை ரூ.991 கோடியில் கட்டுகிறது ஆணையம்
/
சென்னையில் ஆறுவழி மேம்பாலச்சாலை ரூ.991 கோடியில் கட்டுகிறது ஆணையம்
சென்னையில் ஆறுவழி மேம்பாலச்சாலை ரூ.991 கோடியில் கட்டுகிறது ஆணையம்
சென்னையில் ஆறுவழி மேம்பாலச்சாலை ரூ.991 கோடியில் கட்டுகிறது ஆணையம்
ADDED : ஆக 21, 2025 01:11 AM
சென்னை, சென்னையில் மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரை ஆறுவழி மேம்பால சாலை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.
மதுரவாயல் அருகே, வானகரத்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு 11 கி.மீ.,யில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக 6,000 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இப்பணிகளை 2027 பிப்ரவரி மாதம் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப்பணி முடிந்தால், சென்னை துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் எந்த நேரத்திலும் வந்து செல்ல முடியும். நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
அதேநேரத்தில், மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வானகரத்தில் இருந்து பூந்தமல்லியில் சென்னை வெளிவட்டச்சாலை சந்திப்பு வரை 8.1 கி.மீ., நீளத்திற்கு ஆறு வழி மேம்பாலச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இதற்கு, 1,200 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
இதில், மேம்பால கட்டுமான பணிகள் 991 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை வெளிவட்டச்சாலை இணையும் சந்திப்பும், இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வு, அக்., 10ம் தேதி, டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளது.
***