/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை! செங்குன்றம் நிர்வாகம் விழிக்குமா?
/
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை! செங்குன்றம் நிர்வாகம் விழிக்குமா?
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை! செங்குன்றம் நிர்வாகம் விழிக்குமா?
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை! செங்குன்றம் நிர்வாகம் விழிக்குமா?
ADDED : நவ 15, 2024 01:31 AM

செங்குன்றம், சென்னை - திருப்பதி செல்லும் வழித்தடத்தின் முக்கிய பகுதியாக செங்குன்றம் உள்ளது. இங்குள்ள புழல் ஏரி சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரி.
தவிர, மாநிலத்தின் 70 சதவீத அரிசி தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும் செங்குன்றம் உள்ளது.
தினமும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமாகவும் செங்குன்றம் உள்ளது.
வளர்ந்து வரும் பகுதியாக உள்ள இங்கு, திரும்பிய பக்கமெல்லாம் குப்பை குவிந்துள்ளது.
மழைநீர் கால்வாய் துார் வாரப்படாமல் குப்பை குவிந்துள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் வெளியேறி ஓடுகிறது.
குமரன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் வடிய வழியின்றி, ஒரு வாரத்திற்கும் மேல் தேங்கியுள்ளது. இதனால், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஜி.என்.டி., சாலை பேருந்து நிலையம், புழல் ஏரிப்பகுதி போன்ற திரும்பிய பக்கமெல்லாம், அனுமதியற்ற பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, நகரின் அழகு பாழாகி வருகிறது.
கொரோனாவுக்கு முன் இப்பகுதியில் உள்ள சுவர்களில், விழிப்புணர்வு ஓவியங்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக புழல் ஏரி தடுப்புச் சுவர், அரசு பள்ளி வளாக சுவர்களில், இயற்கை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களும், வாசகங்களுமே இருந்தன.
தற்போது, கட்சி பேனர்களே ஆக்கிரமித்துள்ளன. இதுதொடர்பாக கட்சியினரிடையே மோதல் ஏற்படுவதும், பின் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக, செங்குன்றத்தின் பேருராட்சி நிர்வாகம் துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.