/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டையில் வாரிய குடியிருப்புகள் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
/
தண்டையார்பேட்டையில் வாரிய குடியிருப்புகள் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
தண்டையார்பேட்டையில் வாரிய குடியிருப்புகள் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
தண்டையார்பேட்டையில் வாரிய குடியிருப்புகள் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
ADDED : மார் 16, 2025 10:23 PM
தண்டையார்பேட்டை:சென்னை, தண்டையார்பேட்டை, கைலாசபுரம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, 300க்கும் மேற்பட்டோர் குடிசை, தகர செட்டுகளில் வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
அப்பகுதி மக்கள் எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி, மழைக்காலங்களில் பாம்பு, எலி, பூரான், விஷ பூச்சிகள் சுற்றி திரிந்த நிலையில் சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்தனர்.
இதையடுத்து குடிசை வீடுகளை அகற்றி விட்டு, அதே பகுதியிலேயே புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
புதிய குடியிருப்ப கட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்து 2019ல் அனைத்து குடிசை, தகர ஷீட் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
இதற்காக 54 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில், தரைதளம் பார்க்கிங் வசதியுடன் 14 மாடிகளில், 392 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, 18 மாதங்களில் பணி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.
கட்டடப் பணி துவங்கியது. இதில் ஐந்து லிப்ட்கள், தெருவிளக்குகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், தார் சாலை, தீயணைப்பான் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வெஸ்டன் கழிப்பறை வசதியுடன், ஒரு குடியிருப்பு, 400 சதுரடியில் அமைக்கப்பட்டது.
தற்போது கட்டுமான பணிகள் முழுதும் முடிவடைந்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து கைலாசபுரம் மக்கள் கூறுகையில், ' கூலி வேலை செய்து வரும் நாங்கள், ஆறு ஆண்டுகளாக வெளியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகிறோம். விரைந்து குடியிருப்புகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கைலாசபுரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இம்மாத இறுதியில் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்' என்றனர்.