/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
/
அடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஏப் 22, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்,அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மோரேஷ்குமார், 10; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்.
கடந்த 4ம் தேதி, வீட்டின் அருகே, சிறுவன் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்ததில், சிறுவனின் இடுப்பு, கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். கல்லீரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

