sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதல்வரின் கொளத்துார் தொகுதிக்கு மாறியது ரூ.36 கோடி மடை மாற்றம்!   சாத்தாங்காடு ஏரி பறவைகள் சரணாலயமாவதில் சிக்கல்

/

முதல்வரின் கொளத்துார் தொகுதிக்கு மாறியது ரூ.36 கோடி மடை மாற்றம்!   சாத்தாங்காடு ஏரி பறவைகள் சரணாலயமாவதில் சிக்கல்

முதல்வரின் கொளத்துார் தொகுதிக்கு மாறியது ரூ.36 கோடி மடை மாற்றம்!   சாத்தாங்காடு ஏரி பறவைகள் சரணாலயமாவதில் சிக்கல்

முதல்வரின் கொளத்துார் தொகுதிக்கு மாறியது ரூ.36 கோடி மடை மாற்றம்!   சாத்தாங்காடு ஏரி பறவைகள் சரணாலயமாவதில் சிக்கல்


ADDED : ஆக 16, 2025 12:15 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் :சாத்தாங்காடு ஏரியை, பறவைகள் சரணாலயமாக மாற்றும் திட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டாகியும், பணி துவங்காமல் முடங்கியுள்ளது. இதற்காக, மாநகராட்சி ஒதுக்கிய 36 கோடி ரூபாய், முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி வளர்ச்சி திட்டப்பணிக்கு மாற்றப்பட்டதே, இந்த சிக்கலுக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது. திருவொற்றியூர், பழைய எம்.ஜி.ஆர்., நகரை ஒட்டி, சாத்தாங்காடு ஏரி உள்ளது. மொத்தம் 150 ஏக்கர் பரப்பு உடைய இந்த ஏரியை, சுற்றியுள்ள தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதால், 77 ஏக்கராக சுருங்கியுள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர், கால்வாய்கள் வழியாக இந்த ஏரிக்கு நீர்வரத்தாக உள்ளது.

அதிகளவில் வாகனங்கள் செல்லாதது, ஆள்நடமாட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சாத்தாங்காடு ஏரிக்கு கூழைக்கிடா, மைனா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் அதிகளவில் வருகின்றன. அதனால், ஏரியை சரணாலயமாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன், அம்பத்துாரில் உள்ள ஒரு குளத்தை துார்வாரியபோது எடுத்த மண்ணை அள்ளி வந்து, சாத்தாங் காடு ஏரியில் கொட்டி, கரை பலப்படுத்தப்பட்டது.

தவிர, பறவைகள் இளைப்பாறும் வகையில் ஏரி நடுவே தீவு, திட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. எனினும், ஏரியில் தேங்கியுள்ள மழைநீரில் பறவைகள் வந்து தங்குகின்றன.

அதனால், சாத்தாங்காடு ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற, கடந்தாண்டு ஜூலையில் நடந்த திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி கூட்டத்திலும் இது சம்பந்தமாக விவாதம் நடந்தது.

திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு கோரிக்கையின்படி, சாத்தாங்காடு ஏரி பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும் என, மாநகராட்சியில் ஓராண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, 36 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

சரணாலயமாக மாற்றுவதற்காக பணிகள் துவங்கவிருந்த நிலையில், இதற்கென ஒதுக்கிய நிதியை, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சியே மடைமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சாத்தாங்காடு ஏரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முதல்வர் தொகுதிக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ஏதேதோ காரணங்களை கூறி சமாளிக்கின்றனர். அதிகளவில் பறவைகள் வருவதை கருதியும், ஏரி ஆக்கிரமிப்பை தடுக்கவும் பறவைகள் சரணாலயமாக்க வேண்டும். அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாத்தாங்காடு ஏரியைச் சுற்றி, தனியார் தொழிற்சாலைகள் இருப்பதால், அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன நீர், ஏரியில் மாசை உருவாக்கும். அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது' என்றார்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் ஏரி சிக்கிவிடக்கூடாது சாத்தாங்காடு ஏரியை, தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. அதை தடுக்க, அந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பது என, மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி வேறொரு மண்டலத்திற்கு திடீரென மாற்றப்பட்டுவிட்டது. ஏரியில் ஆக்கிரமிப்பை தொடராமல் தடுக்க வேண்டும். அதற்கேற்ப, பறவைகள் சரணாலயம் அமைக்க மாநகராட்சி நிதி ஒதுக்கி பணிகளை துவக்க வேண்டும். - தி.மு.தனியரசு, மண்டல குழு தலைவர், திருவொற்றியூர்.

மாநகராட்சியிடமே விபரம் இல்லையா? சாத்தாங்காடு ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், 150 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி, 77 ஏக்கராக சுருங்கி விட்டது. இதுகுறித்து, தகவலறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டபோது, வருவாய் துறை தரப்பில், 'ஏரியின் பரப்பளவு 77 ஏக்கராக உள்ளது' என்றும், மாநகராட்சி தரப்பில் விபரங்கள் ஏதும் இல்லை என்றும் பதில் அளித்துள்ளனர். மாநகராட்சி பராமரிக்கும் ஏரி குறித்து, எந்த தகவலும் இல்லை என்பது சரியான நடைமுறையாக தெரியவில்லை. ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின், பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். - எஸ்.ஆனந்த், சமூக ஆர்வலர், மணலி.






      Dinamalar
      Follow us