/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தூய்மை பணியாளர் ஓட ஓட வெட்டி கொலை
/
தூய்மை பணியாளர் ஓட ஓட வெட்டி கொலை
ADDED : பிப் 01, 2024 12:37 AM

திருவான்மியூர், கண்ணகிநகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 37; அடையாறு மண்டலம், 180வது வார்டு துாய்மை பணியாளர். மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று மாலை துாய்மை பணி முடித்துவிட்டு, 'பேட்டரி' வாகனத்தை திருவான்மியூர் எல்.பி., சாலையில் ஓட்டிச் சென்றார்.
அவ்வை தெருவில் செல்லும் போது, ஆட்டோ நிறுத்தத்தில் மறைந்திருந்த நான்கு பேர், கொலை செய்ய இவரை துரத்தியுள்ளனர்.
டில்லிபாபு, அருகில் உள்ள ஒரு,'காம்பவுன்ட்' சுவரை ஏறி குதித்து தப்பிக்க முயன்ற போது, நான்கு பேரும் சேர்ந்து அவரைப் பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்து சென்ற திருவான்மியூர் போலீசார், டில்லிபாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் 27ம் தேதி டில்லிபாபுவிற்கும், வீட்டின் அருகே உள்ள சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கொலையாளிகளை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.