/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்தில் நடத்துநரின் போன் பை ' ஆட்டை … '
/
பேருந்தில் நடத்துநரின் போன் பை ' ஆட்டை … '
ADDED : ஜூலை 20, 2025 11:31 PM
கொடுங்கையூர்:கொடுங்கையூரில், பேருந்தில் இருந்து நடத்துநரின் பையை 'ஆட்டை' போட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடுங்கையூர், சஞ்சய் நகர், எம்.பி.எம்., நகரைச் சேர்ந்தவர் மீனா, 49; மாநகர பேருந்து நடத்துநர். இவர், கண்ணதாசன் நகரில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் தடம் எண் '33சி' மாநகர பேருந்தில், நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று தடம் எண் '33சி' மாநகர பேருந்து, பிராட்வேயில் இருந்து புறப்பட்டு, கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் வந்தது.
அப்போது ஓட்டுநர் சீட் பின்புறம் இருந்த நடத்துநரின் பையில் மொபைல்போன், அரசு டிக்கெட் மிஷின் இருந்துள்ளது. அப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.