/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சின்னாபின்னமான சாலை சீரமைக்கிறது மாநகராட்சி
/
சின்னாபின்னமான சாலை சீரமைக்கிறது மாநகராட்சி
ADDED : நவ 11, 2024 02:18 AM

சென்னை:சிந்தாதிரிப்பேட்டையில் கலவை தெருவில் சாலை தோண்டி, பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், சாலை மறு சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை.
இதனால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக சாலை மாறியது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி, பாதசாரிகளும் சறுக்கி விழுந்து, காயமடைந்து வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, சேறும் சகதியுமான சாலையை, மாநகராட்சியினர் மண் கொட்டி சீரமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக பணி மேற்கொள்ளாமல், சாலையை தரமானதாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.