/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்படைப்பு மாநகராட்சியின் தீர்மானம் திடீர் வாபஸ்
/
கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்படைப்பு மாநகராட்சியின் தீர்மானம் திடீர் வாபஸ்
கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்படைப்பு மாநகராட்சியின் தீர்மானம் திடீர் வாபஸ்
கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்படைப்பு மாநகராட்சியின் தீர்மானம் திடீர் வாபஸ்
ADDED : அக் 30, 2024 07:14 PM
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக, ஒன்பது கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்கள் உள்ளன.
கால்பந்து விளையாட்டு திடல்களை பராமரிப்பதால், மாநகராட்சிக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படுவதாக கூறி, அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், நிலையான வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியாருக்கு ஒப்பந்தம் விடவும், விளையாட்டு திடலில் பயிற்சி பெற, ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 93.31 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ரிப்பன் மாளிகையில், கால்பந்து விளையாடி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கால்பந்து விளையாட்டு திடலை, தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கவுன்சில் கூட்டத்தில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கால்பந்து விளையாட்டு திடல் திரும்ப பெறப்பட்டதால், 78 தீர்மானங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கால்பந்து விளையாட்டு திடலில், அனைத்து தரப்பினரும் இலவசமாக பயிற்சி பெறும் வகையில், தீர்மானம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

