UPDATED : நவ 26, 2026 07:25 PM
ADDED : நவ 26, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் – போரூர் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில், கடந்த 19ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
உடலை பரிசோதனைக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மது போதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், இறந்த நபர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த கார்பென்டர் சரவணன், 43, என்பது தெரிய வந்தது.
