/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி 'ஜவ்' விரைந்து முடிக்க மாடம்பாக்கம் மக்கள் கோரிக்கை

ADDED : பிப் 06, 2024 12:51 AM

மாடம்பாக்கம், மாடம்பாக்கத்தில், மந்தமாக நடந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை வேகப்படுத்தி விரைந்து முடிப்பதோடு, இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய தொட்டியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, நுாத்தஞ்சேரி குளத்தில் இருந்து, தண்ணீரை எடுத்து, ஸ்ரீராம் நகர், ஆதித்யா நகர், சபாபதி நகர், திருவள்ளுவர் தெரு, மாணிக்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
குளத்தை ஒட்டியிருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை நிரப்பி வினியோகித்து வந்தனர். அந்த தொட்டி கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், பழுதடைந்து உடையும் நிலைக்கு மாறியது.
இதையடுத்து, அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவது நிறுத்தப்பட்டு, அருகே 57 லட்சம் ரூபாய் செலவில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணி மந்தமாக நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், உடையும் நிலையில் உள்ள பழைய தொட்டியால் விபரீதம் ஏற்படும் முன், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.