sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நாடோடிகள் வசித்த குடிசைகள் அகற்றம் போக்கிடமின்றி குழந்தைகளுடன் தவிப்பு

/

 நாடோடிகள் வசித்த குடிசைகள் அகற்றம் போக்கிடமின்றி குழந்தைகளுடன் தவிப்பு

 நாடோடிகள் வசித்த குடிசைகள் அகற்றம் போக்கிடமின்றி குழந்தைகளுடன் தவிப்பு

 நாடோடிகள் வசித்த குடிசைகள் அகற்றம் போக்கிடமின்றி குழந்தைகளுடன் தவிப்பு


ADDED : ஜன 06, 2026 06:09 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்: எண்ணுார் தாழங்குப்பம் கடற்கரையோரம் குடிசை அமைத்து தங்கியிருந்த, 20க்கும் மேற்பட்ட நாடோடி குடும்பத்தினரை, மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றியதால், குழந்தைகளுடன் போக்கிடமின்றி வெயிலில் தவிக்கும் நிலை உள்ளது.

சென்னை, எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரை எதிரேயுள்ள காலி இடத்தில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட, 20க்கும் மேற்பட்ட நாடோடி குடும்பத்தினர், மூன்று ஆண்டுகளாக குடிசை அமைத்து வசித்து வந்தனர். வீடுகள் தோறும் சிக்கு முடிகளை விலைக்கு வாங்கி, மாற்றாக பாத்திரம் தரும் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், தாழங்குப்பம் கடற்கரையை அழகுபடுத்துதல், பூங்கா அமைத்தல் போன்ற பணிக்காக, இவர்களை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இருப்பினும், போக்கிடம் ஏதுமில்லாததால், யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.

மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அங்கு முகாமிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகளாக கருதப்பட்ட நாடோடிகளின், 20 க்கும் மேற்பட்ட குடிசைகளை, இடித்து அகற்றினர். சிலர், உடைமைகளுடன், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததாக தெரிகிறது.

போக்கிடம் இல்லாததால், பெண்கள் சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடன் அங்கேயே வெயிலில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எண்ணுார் போலீசார், அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவினர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

பூங்கா கட்டுவதாக எங்களை வெளியேற சொல்லியிருந்தனர். எங்களுக்கு வேறு இடம் இல்லாததால் காலி செய்யவில்லை. இன்று, குடிசையை இடித்து அகற்றி விட்டனர்.

உடைமைகள் மற்றும் கைக்குழந்தையுடன் வெயிலில் தவிக்கிறோம். சில பிள்ளைகள், இங்குள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தாழங்குப்பம் கடற்கரை ஒட்டிய சாலையோரம், தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வந்தவர்களுக்கு, விபரங்கள் தெரிவிக்கப்பட்டு, முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இங்கு, பூங்கா மற்றும் கடற்கரை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன' என்றனர்.






      Dinamalar
      Follow us