ADDED : ஜன 30, 2024 12:31 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, நரசிம்ம நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்,40. இவர், புதுப்பேட்டை பேருந்து பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் திரு.வி.க. நகர் நலச்சங்க விளையாட்டு பயிற்சி மைதானத்தில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த போது, திரு.வி.க.நகரைச் சேர்ந்த ரவுடி முகமது ஹூசைன், 37 என்பவர் மது போதையில், ராஜேஷிடம் தகராறு செய்துள்ளார். பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்த போது, ராஜேஷ் தடுத்தார்.
அப்போது, கையில் வைத்திருந்த கத்தியால், ராஜேஷின் வலது காதை, முகமது ஹுசைன் வெட்டியுள்ளார். ரத்தம் சொட்டச் சொட்ட ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஹூசைனை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.