ADDED : ஜன 04, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், திரு.வி.க., தெரு, மேட்டுத்தெரு, டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு உள்ளிட்ட பல தெருக்களில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அடி குழாய்கள் பழுதடைந்தும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளன. சில இடங்களில் வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளன.
மேலும், தெருவில் விளையாடும் சிறுவர்கள், அவற்றின் மீது மோதி காயமடைகின்றனர். பழுதடைந்த குழாய்களை சீரமைத்தும், பொதுமக்களுக்கு பயன்படாத குழாய்களை அகற்றி, விபத்து மற்றும் பாதிப்புகளை தவிர்க்கவும், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமரகுரு, 46, செங்குன்றம்.