/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் கிழக்கு - மேற்கை இணைக்கும் நடைமேம்பாலம் விரைவில் திறப்பு
/
தாம்பரம் கிழக்கு - மேற்கை இணைக்கும் நடைமேம்பாலம் விரைவில் திறப்பு
தாம்பரம் கிழக்கு - மேற்கை இணைக்கும் நடைமேம்பாலம் விரைவில் திறப்பு
தாம்பரம் கிழக்கு - மேற்கை இணைக்கும் நடைமேம்பாலம் விரைவில் திறப்பு
ADDED : மே 23, 2025 12:15 AM

தாம்பரம் :சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில், தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு பணிகளுக்காக தாம்பரம் வந்து செல்கின்றனர்.
இவர்களில் 70 சதவீதம் பேர், தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஒரு பகுதியினர், மேற்கு தாம்பரத்தில் இருந்து ரயில்வே நடைமேம்பாலம் வழியாக கிழக்கு தாம்பரம் சென்று, அங்கிருந்து பல இடங்களுக்கு செல்கின்றனர்.
ரயில் பயணியரும், மேற்கில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் மக்களும் சேர்ந்து பயன்படுத்துவதால், ரயில்வே நடைமேம்பாலத்தில், 'பீக் அவர்' நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, மேற்கில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்வோரின் வசதிக்காக, தனியாக ஒரு நடைமேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தற்போதுள்ள நடைமேம்பாலத்தை ஒட்டி, நகரும் படிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதன் வாயிலாக, மேற்கில் இருந்து செல்வோர், தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் ஏறி, சிறிது துாரம் நடந்து சென்று, டிக்கெட் கவுன்டரை ஒட்டி, இடது புறம் திரும்பி, புதிய நடைமேம்பாலம் வழியாக தண்டவாளத்தை கடந்து, கிழக்கு தாம்பரம் செல்லலாம்.
அதே நேரத்தில், ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் நகரும் படிகள் வருவதால், ரயிலில் வந்து இறங்குவோர், எளிதில் கிழக்கு தாம்பரம் செல்ல முடியும்.
இப்பணி வேகமாக நடந்து வருவதால், ஓரிரு மாதங்களில் இந்த நடைமேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.