/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கிய பெண்ணை 'சீண்டிய' வாலிபர் சிக்கினார்
/
விபத்தில் சிக்கிய பெண்ணை 'சீண்டிய' வாலிபர் சிக்கினார்
விபத்தில் சிக்கிய பெண்ணை 'சீண்டிய' வாலிபர் சிக்கினார்
விபத்தில் சிக்கிய பெண்ணை 'சீண்டிய' வாலிபர் சிக்கினார்
ADDED : ஜன 13, 2024 12:11 AM
அண்ணா சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, போதை வாலிபர் சிக்கினார்.
சென்னை, அண்ணா சாலை மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு, இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அங்கு, அவர் மீது கார் ஒன்று மோதியதில், கீழே விழுந்து லேசான காயமடைந்துள்ளார்.
அங்கு நின்றிருந்த போதை வாலிபர் ஒருவர், அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல, இருசக்கர வாகனத்தை துாக்கி நிறுத்திவிட்டு, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்படி, அங்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் அலி, 32, என தெரிந்தது.
போதையில் இருந்த அவர், தெரியாமல் செய்து விட்டதாக மன்னிப்பு கேட்டதால், அந்த இளம்பெண்ணும் மன்னித்து விட்டு விடுமாறு கூறியுள்ளார்.
இதனால், பயாஸ் அலியிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி உள்ளனர்.