ADDED : ஜூன் 26, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, போதையில் சாலையோரம் துாங்கியவரிடம், வெள்ளி செயின், மொபைல் போன் பறித்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவைச் சேர்ந்தவர் புதுயா, 28. ராமாபுரத்தில் தங்கி பெயின்டிங் பணி செய்கிறார்.
சில நாட்களுக்குமுன், சைதாப்பேட்டை, ஜீன்ஸ் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, சாலையோரம் துாங்கிவிட்டு, மாலை எழுந்தார்.
அப்போது, அவரது வெள்ளி செயின், மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. சைதாப்பேட்டை போலீசாரின் விசாரணையில், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த இளையராஜா, 39, பாபுலால், 27, என தெரிந்தது.
நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், வெள்ளி செயின், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.