/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்
/
வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்
ADDED : பிப் 19, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்:செங்குன்றம், எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 36; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடித்து எருக்கஞ்சேரி வழியாக வீட்டிற்கு சென்றார். அப்போது, போதையில் வந்த மர்ம நபர் ஒருவர், சுரேஷை தாக்கி 500 ரூபாயை பறித்துச் சென்றார்.
எம்.பி.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரபாகரன், 20, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

