/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேட்பாரற்று கிடந்த நகை பை ஒப்படைத்த நேர்மை முதியவர்
/
கேட்பாரற்று கிடந்த நகை பை ஒப்படைத்த நேர்மை முதியவர்
கேட்பாரற்று கிடந்த நகை பை ஒப்படைத்த நேர்மை முதியவர்
கேட்பாரற்று கிடந்த நகை பை ஒப்படைத்த நேர்மை முதியவர்
ADDED : டிச 02, 2024 01:26 AM

போரூர்:திருவேற்காடு அடுத்த நுாம்பல் பகுதியைச் சேர்ந்தவர் பாலாம்பிகை, 43. இவர், நேற்று முன்தினம் போரூரில் உள்ள கடைக்கு வந்தார். பின், கால் டாக்ஸி வாயிலாக வீடு திரும்பினார்.
வீட்டிற்கு சென்றவர், தன் நகை பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் 3 சவரன் நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் இருந்தது. இது குறித்து, போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், மந்தவெளியில் உள்ள பெருமாள் கோவிலில் பணிபுரிந்து வரும் வெங்கடேசன், 64, என்பவர், போரூர் சக்தி நகருக்கு சென்று திரும்பியபோது, பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து சென்று கோவிலில் ஒப்படைத்தார்.
இது குறித்து, போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், அது பாலாம்பிகை தவற விட்ட நகை பை என, தெரிய வந்தது.
இதையடுத்து, நகை பை பாலாம்பிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மைக்கு முன்னுதாரணமாக மாறிய வெங்கடேசனை போலீசார் பாராட்டினர்.