/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது
/
பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது
ADDED : ஜூலை 20, 2025 11:37 PM
செம்பியம்,:ஸ்கூட்டியில் சென்ற ஐ.டி., ஊழியரிடம் அத்துமீறிய வாலிபரின் அடையாளம் தெரிந்தது.
புளியந்தோப்பைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், கோடம்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 15ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் பணி முடிந்து, ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த நபர், இளம்பெண்ணின் ஸ்கூட்டியை மறித்து, சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். சில நிமிடத்தில் மீண்டும் திரும்பி வந்த நபரை, அப்பெண் தைரியமாக மொபைல் போனில் படமெடுத்து, செம்பியம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும், பெரவள்ளூர், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவர் அத்துமீறியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.