தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சட்டசபை நேரலை தொடரும்!

சட்டசபை நேரலை தொடரும்!

சட்டசபை நேரலை தொடரும்!


UPDATED : ஆக 23, 2026 10:40 PM

ADDED : ஆக 23, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 10:40 PM ADDED : ஆக 23, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபை அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட தகவல்கள், 'ரீல்ஸ்' மூலம் வேறு வகையில் பயன்படுத்தி, மக்கள் கவனத்தை ஈர்ப்பது என்பது விதிகளுக்கு முரணானது. அப்படி செய்பவர்களை குறிப்பிட்டு, எனக்கு கடிதம் அனுப்பப்படுமேயானால், நிச்சயமாக உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டசபை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதன் மூலமாக நமது அமைச்சரவை எப்படி உள்ளது; எதிர்க்கட்சிகள் எப்படி உள்ளது. சட்டசபை உறுப்பினர்கள் சொல்லும் கருத்தை, மக்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக சட்டசபை நேரலை உள்ளது. நிச்சயமாக இந்த நேரலை தொடரும்.

கண்ணியமான வார்த்தைகளை உபயோகிப்பது மட்டுமில்லை. ஆளுங்கட்சிக்கு, எதிர்காலத்தில் மக்களுக்கு பயன்படக்கூடிய ஆலோசனைகள் எதிர்கட்சிகள் தெரிவிக்க வேண்டும்; அதைத்தான் மக்கள் விரும்புவர்.

- ஜே.சி.டி.பிரபாகர்,

தமிழக சபாநாயகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us