
திருவொற்றியூர், 'மிக்ஜாம்' புயலின் போது, மழை நீருடன் தொழிற்சாலை கச்சா எண்ணெய் கழிவு கலந்து வந்ததால், திருவொற்றியூர் மண்டலத்தின், 4, 6, 7 ஆகிய வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட, 4, 6, 7 உள்ளிட்ட மூன்று வார்டுகளைச் சேர்ந்த, 6,700 குடும்பங்களுக்கு, தலா 7,500 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதல், 6வது வார்டின், அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், பொன்னியம்மன் நகர், ராஜா சண்முகம் நகர், கலைவாணர் நகர் உள்ளிட்ட பல நகர்களுக்கு, நிவாரணம் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள், ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், கோரிக்கை மனு மற்றும் பாதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்து, வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியத்திடம் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, நேற்று காலை, 3,000 மனுக்களுடன், காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம் தலைமையில், வார்டு மக்கள், 500க்கும் மேற்பட்டோர், மணலி, சி.பி.சி.எல்., சந்திப்பில் நிவாரணம் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், கோரிக்கை மனுக்களை, சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் வழங்கினர்.