/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க வரும் 15 கடைசி
/
தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க வரும் 15 கடைசி
ADDED : ஜூலை 04, 2025 12:16 AM
சென்னை, 'மாநகராட்சி தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிறக்க, மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மோட்டார்வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், மின் பணியாளர், பொருத்துநர் ஆகிய பாடப்பிரிவுகளில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில், 14 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
தகுதியுடைய மாணவர்களுக்கு மாதம், 10,500 ரூபாய் சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
தொழிற்பயிற்சியில் சேர விரும்புவோர், www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.