ADDED : பிப் 01, 2024 12:34 AM

திருவொற்றியூர் நெடுஞ்சாலை - எண்ணுார் விரைவு சாலையை, எம்.ஆர்.எப்., சாலை இணைக்கிறது. இச்சாலையில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி ஆகியோரது வீடுகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த சாலை பெயர்க்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிந்த நிலையில், சாலை செப்பனிடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. சாலையோரம் எந்தவித பாதுகாப்புமின்றி, ராட்சத குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சாலையில் தெருவிளக்குகளும் முறையாக ஒளிராததால், 1 கி.மீ., துார சாலையை நடந்து கடப்பது பெரும் சவாலாக உள்ளதாக, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இச்சாலையில் பணிகளை விரைந்து முடித்து தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்திரா, திருவொற்றியூர்.