/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி ஓட்டுனர், தி.மு.க., பிரமுகர் மாறி மாறி புகார்
/
லாரி ஓட்டுனர், தி.மு.க., பிரமுகர் மாறி மாறி புகார்
லாரி ஓட்டுனர், தி.மு.க., பிரமுகர் மாறி மாறி புகார்
லாரி ஓட்டுனர், தி.மு.க., பிரமுகர் மாறி மாறி புகார்
ADDED : பிப் 20, 2024 12:45 AM
கே.கே., நகர், ராமாபுரம், பாரதி சாலையைச் சேர்ந்தவர் கணேஷ், 30; தனியார் கழிவுநீர் லாரி ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஏரிக்கரை தெரு வழியாக கழிவுநீர் லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது, 137வது வார்டு தி.மு.க., வட்ட துணை செயலர் ஜெயசந்திரன், 43, உட்பட மூன்று பேர், லாரியை வழிமறித்தனர்.
பின், இந்த வழியாக கழிவுநீர் லாரி அதிவேகமாக இயக்கப்பட்டதால், விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, கடந்த சில ஆண்டுகளாக இவ்வழியாக கழிவுநீர் லாரிகள் இயக்கப்படுவதில்லை என, அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று கே.கே.நகர் முனுசாமி சாலை வழியாக கணேஷ் லாரியை ஓட்டி சென்றார். அப்போது, ஜெயசந்திரன் மற்றும் இருவர், லாரியை வழிமறித்து, கணேஷை கன்னத்தில் அறைந்து, மிரட்டல் விடுத்து லாரி கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, கே.கே.நகர் காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார்.
அதேபோல், ஜெயசந்திரன் அவரது நண்பருடன் பைக்கில் சென்றபோது, லாரி ஓட்டுனர் கணேஷ் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் கழிவுநீர் லாரியால் மோத வந்ததாக, அவர் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இரு புகார்கள் குறித்தும் கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

