ADDED : செப் 19, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் மருத்துவர், பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.
பல்லாவரம், ஐ.ஜி., சாலை சிக்னல் அருகே சென்றபோது, சிக்னலில் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் கவரில் அவரது கால் உரசி, கவர் கிழிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வாகனத்தில் வந்த, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த அப்துல் அஜிஸ், 50, என்பவர், மருத்துவரிடம் தகராறு செய்து, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பல்லாவரம் போலீசார் விசாரித்து, அப்துல் அஜிஸை கைது செய்து விசாரிக்கின்றனர்.