ADDED : பிப் 01, 2024 12:31 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்து வருகிறார்.மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், 21, என்பவரும், கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.
பின், புஷ்பராஜ் நடவடிக்கை சரியில்லாததால், மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து விலகியுள்ளார். நேற்று முன்தினம், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவியை, சேத்துப்பட்டு அருகில் புஷ்பராஜ் வழிமறித்து, மீண்டும் காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.
மாணவி மறுக்கவே, புஷ்பராஜ் அவரை தாக்கியதாக தெரிகிறது. தகவல் அறிந்த மாணவியின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர், புஷ்பராஜின் குடும்பத்தாரிடம் முறையிட, தகராறு ஏற்பட்டு இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, புஷ்பராஜ் மற்றும் மாணவியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.