/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை வீட்டை அபகரித்து மிரட்டல் விடுத்தவர் கைது
/
வாடகை வீட்டை அபகரித்து மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : நவ 09, 2024 12:25 AM

ஆவடி,திருவள்ளூர் மாவட்டம், திருவெள்ளைவாயல், ரத்தினமணி நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 40. இவர், செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் கிராமம் கலைவாணர் தெருவில் 1,320 சதுரடி வீட்டுமனையை 1985ல் கோவிந்தன் என்பவரிடம் இருந்து கிரையம் பெற்றுள்ளார்.
அந்த இடத்தில் வீடு, கடை கட்டி, கடந்த 2005ல், உதயகுமாரி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். உதயகுமாரி அந்த வீட்டை, கடந்த 2009ல் தனசேகர் என்பவருக்கு செட்டில்மென்ட் ஆவணம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஹரிஹரன், மேல் வாடகைக்கு வீட்டை கொடுத்தது குறித்து கேட்டுள்ளார். ஆனால் உதயகுமாரி, ஹரிஹரனை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து, 2014ல் தனசேகருக்கு செய்து கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்துவிட்டு, தன் மகள்களான திவ்யபாரதி, ஆராதனா ஆகிய இருவருக்கும், செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு, 55 லட்ச ரூபாய்.
இந்த நிலையில், தன் வீட்டை மீட்டுத் தரும்படி ஹரிகரன், ஆவடி கமிஷனரகத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி, நில பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த உதயகுமாரி, 56, என்பவரை, நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தார்.