ADDED : அக் 20, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில், 17 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு புகார் மனு அளித்து இருந்தார்.
அதில், தனது தந்தை இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், தற்போது தனது தாயை துரத்திவிட்டு தன்னை மனைவியாக்க முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.