/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடமாடும் ரேஷன் கடை மீண்டும் செயல்பட வேண்டும்
/
நடமாடும் ரேஷன் கடை மீண்டும் செயல்பட வேண்டும்
ADDED : பிப் 20, 2024 12:55 AM
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நடமாடும் ரேஷன் கடை திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, மாதம் தோறும் இரண்டாவது வியாழன் அன்று, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், சமுதாய கூடம் அருகில், நடமாடும் ரேஷன் கடை வேனில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனால், பெண்கள், முதியோர் அதிகம் பயனடைந்தனர். இரு ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில், நடமாடும் ரேஷன் கடை செயல்படவில்லை.
இல்லம் தேடி கல்வி, மருத்துவம் என புரட்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர், நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
- சீனி.சேதுராமன், 62, கார்த்திகேயபுரம், மடிப்பாக்கம்.

