ADDED : ஆக 13, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இதற்கு பெயர் தான் நிழற்குடையாம்...!
எண்ணுார் விரைவு சாலையில் 25க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிறுத்தங்களில், சமீபமாக 10 - 13 லட்ச ரூபாய் செலவில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சில மாதங்களிலேயே, அவற்றின் கூரை பெயர்ந்து அலங்கோலமாக மாறிவிடுகின்றன. அந்த வரிசையில், ஐ.டி.சி., உலகநாதபுரம், முல்லை நகர் சந்திப்பு போன்ற பல பேருந்து நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடைகள் கூரையின்றி உள்ளன.
அடிக்கடி பல லட்சம் செலவழித்து, எவர் சில்வர் நிழற்குடை அமைப்பதற்கு பதிலாக, முன் போல் கான்கிரீட் நிழற்குடை அமைத்தால், நிழற்குடையின் ஆயுட்காலமும் அதிகம் இருக்கும்; பயணியரும் பேருந்து வரும் வரை நிழலில் காத்திருக்க முடியும்.
- அவினேஷ், கல்லுாரி மாணவர், எண்ணுார்.