/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகற்ற அகற்ற முளைக்கும் ஆக்கிரமிப்பு தாம்பரத்தில் தீராத அக்கப்போர்
/
அகற்ற அகற்ற முளைக்கும் ஆக்கிரமிப்பு தாம்பரத்தில் தீராத அக்கப்போர்
அகற்ற அகற்ற முளைக்கும் ஆக்கிரமிப்பு தாம்பரத்தில் தீராத அக்கப்போர்
அகற்ற அகற்ற முளைக்கும் ஆக்கிரமிப்பு தாம்பரத்தில் தீராத அக்கப்போர்
ADDED : செப் 19, 2024 12:46 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் ஜி.எஸ்.டி., சாலையில் குரோம்பேட்டை, தாம்பரம், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட சாலைகளில், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது.
சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் இப்பிரச்னையை தீர்க்க, போலீசார், வியாபாரிகள் கூட்டம் இம்மாதம் 9ம் தேதி நடத்தப்பட்டது.
இதையடுத்து, 12ம் தேதி கடப்பேரி சாலையில் போலீசார் சார்பிலும், 13ல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்கள் அகற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று, தாம்பரம் சானடோரியத்தில், காசநோய் மருத்துவமனை சிக்னல் முதல் 'மெப்ஸ்' சிக்னல் வரை, கிண்டி - தாம்பரம் சாலையோரம் நிறுத்தியிருந்த 20 வாகனங்களை அகற்றினர்.
இதில் 10 வாகனங்களுக்கு தலா 1,000 அபராதம் வசூலித்த பின், வாகனங்களை விடுவித்தனர். நடைபாதையில் இருந்த விளம்பர பலகைகளையும், போக்குவரத்து போலீசார் நேற்று அகற்றினர்.
தொடர் ஆய்வில், 'ஸ்டார்' என்ற ஹோட்டல் நிர்வாகம், கால்வாயில் கழிவுநீரை விட நடைபாதையை உடைத்ததும், போலீசாருக்கு தெரியவந்தது. கடைக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த முக்கிய சாலைகளில் வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினாலும், அடுத்த நாளே மீண்டும் புதிதாக முளைத்து விடுகின்றன.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியாமல், போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தவிக்கின்றனர்.