/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை 18 ஆனது
/
தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை 18 ஆனது
தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை 18 ஆனது
தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை 18 ஆனது
ADDED : அக் 01, 2024 12:28 AM
தாம்பரம்,
தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் ஆகியவை நகராட்சிகளாக இருந்தன. பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை ஆகியவை பேரூராட்சிகளான இருந்தன.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், நகராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து, புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
அடுத்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தாம்பரம் மாநகராட்சியுடன், பரங்கிமலை ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, எதிர்கால திட்டமாக, 15 ஊராட்சிகளையும் சேர்த்து, ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
அத்திட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, அரசின் அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 15 ஊராட்சிகளின் தலைவர், செயலர்கள் ஆகியோர், சமீபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
ஊராட்சிகளின் மக்கள் தொகை, குடியிருப்பு, வருமானம், குப்பை சேகரிப்பு வாகனங்கள், நிரந்தர ஊழியர்கள், சாலை, மின் விளக்கு, தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட பட்டியல் குறித்து ஆலோசித்தனர். கூடுதல் ஊராட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவித்தனர்
இதையடுத்து,மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை 15ல் இருந்து, வேங்கடமங்கலம், வண்டலுார், ஊரப்பாக்கம் ஊராட்சிகளை சேர்த்து, 18 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.