/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறநகர் ரயில் பயணியர் எண்ணிக்கை வரும் 2030ல் 16 லட்சமாக உயரும்! சேவைகளை மேம்படுத்துமா ரயில்வே?
/
புறநகர் ரயில் பயணியர் எண்ணிக்கை வரும் 2030ல் 16 லட்சமாக உயரும்! சேவைகளை மேம்படுத்துமா ரயில்வே?
புறநகர் ரயில் பயணியர் எண்ணிக்கை வரும் 2030ல் 16 லட்சமாக உயரும்! சேவைகளை மேம்படுத்துமா ரயில்வே?
புறநகர் ரயில் பயணியர் எண்ணிக்கை வரும் 2030ல் 16 லட்சமாக உயரும்! சேவைகளை மேம்படுத்துமா ரயில்வே?
ADDED : ஜன 05, 2026 05:53 AM
சென்னை: 'தற்போது, 9.40 லட்சமாக உள்ள சென்னை புறநகர் ரயில் பயணியரின் எண்ணிக்கை, வரும் 2030ம் ஆண்டில் 16 லட்சமாக உயரும்' என, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து க் குழுமமான 'கும்டா' கணக்கிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினமும், 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் அதி கரித்து வருவதால் தற்போது, 9.40 லட்சமாக உள்ள ரயில் பயணியர் எண்ணிக்கை, வரும் 2030ம் ஆண்டில் 16 லட்சம்; 2040ல், 22 லட்சம்; 2048ல் 35 லட்சமாகவும் உயரும் என, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழு மம் கணக்கீடு செய்துள்ளது.
எனவே, இதற்கான, புறநகர் ரயில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே நடந்து வரும் ரயில் திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து முடிக்க தெற்கு ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான நிதியை ஒதுக்கி வருகிறது.
சென்னை புறநகரில் ரயில் சேவையை அதிகரிக்கும் வகையில், 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இருப் பினும், பெரும்பாலான திட்டங்களுக்கு, ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தொகையும் ஒதுக்குவதில்லை.
பல்வேறு மாநில அரசுகள், ரயில்வேயுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசும் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றும்போது, ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க முடியும். கூடுதல் ரயில் சேவையையும் பயணியர் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

